இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தனது 57 வயதில் 3 வது மனைவி மூலம் 7 வது குழந்தைக்குத் தந்தையாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் எது செய்தாலும், அது பேசும் பொருளாக மாறிவிடுவது இயல்பு தான். அந்த வகையில் தான், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிறந்த மூத்த மகளுக்கு தற்போது 27 வயது ஆகும் நிலையில், அவர் தனது 3 வது மனைவியின் மூலம் 7 வது குழந்தைக்குத் தந்தையாகி உள்ள சம்பவமும், உலகம் முழுவதும் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் 3 வது மனைவியான, கேரி தம்பதிக்குத் தான் தற்போது 2 வதாக பெண் குழந்தை பிறந்திருக்கிறது. 

அதாவது,  2019 ஜூலையில் பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்ட அந்நாட்டின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன், இதற்கு முன்பாக லண்டன் மேயர் உள்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

குறிப்பாக, போரிஸ் ஜான்சனின் முதல் மனைவி மோன்ஸ்டின் ஓவன் என்பவர், கடந்த 1993 ஆம் ஆண்டு உயிரிழந்தார். ஆனால், முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. 

அதன் பிறகு, அந்நாட்டின் பிரபல வழக்கறிஞரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மரினா வீலரை கடந்த 1993 ஆம் ஆண்டு போரிஸ் ஜான்சன் திருமணம் செய்து கொண்டார்.

பின்னர், போரிஸ் ஜான்சன் - மரினா வீலர் ஜோடி, கடந்த 2020 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தது. 

ஆனால், 2 வது மனைவி மெரினா வீலர் - போரிஸ் ஜான்சன் தம்பதிக்கு, மொத்தம் 4 குழந்தைகள் பிறந்தனர்.

அதன் பின்னர், கடந்த 2009 ஆம் ஆண்டு கலை ஆலோசகராகச் செயல்பட்ட ஹெலன் மெக்கிண்டயர் என்ற பெண்மணியுடன், போரிஸ் ஜான்சனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தில், ஸ்டெபானி மேகிண்டயர் என்ற ஒரு குழந்தை பிறந்தது.

பின்னர், கடந்த 2019 ஆம் இறுதியில், “எனக்கும் அரசியல் செயற்பாட்டாளர் கோரிக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளதாக” போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.

ஆனால், இந்த ஜோடிக்குத் திருமணத்திற்கு முன்பாகவே கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு மகன் பிறந்தார். 

பின்னர், கடந்த மே மாதம் போரிஸ் ஜான்சனும், கேரியும் கத்தோலிக்க முறைப்படி மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில் தான், போரிஸ் ஜான்சன் 3 வது மனைவியான கேரி தம்பதிக்கு, தற்போது லண்டனில் உள்ள தேசிய அரசு மருத்துவமனையில் தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. 

அதன்படி, “தற்போது தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக” மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிறந்த மூத்த மகளுக்கு தற்போது 27 வயதாகும் நிலையில், தற்போது 7 வது குழந்தைக்கு அவர் தந்தையாகி இருப்பது உலக அளவில் வைரலாகி வருகிறது.