“சீனாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் நாடுகள் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று, சீனா பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்துள்ளது, உலக நாடுகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

சீனாவின் சமீபத்திய போக்கு, இந்தியாவுக்கு எதிராக பெரும்பாலும் அமைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

முக்கியமாக, இந்திய எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருவதுடன், இந்தியாவை அச்சுருத்தி, எல்லைகளையும் ஆக்கிரமித்து வருகிறது.

இது மட்டுமில்லாமல், சீனாவில் சிறுபான்மையின மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாகவும், சமீபத்தில் புதிய குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த குற்றச்சாட்டால், கடும் அதிர்ச்சியடைந்த மற்ற உலக நாடுகள், தங்களது நிலைப்பாடு பற்றி யோசித்து வருகிறது.

இந்த நிலையில் தான், “அடுத்த ஆண்டு சீனாவில் நடக்க உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியை அலுவல் ரீதியாகப் புறக்கணிப்பதாக” அமெரிக்கா முன்னதாக அறிவித்தது.

அதன் தொடர்ச்சியாக, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் “சீனாவில் நடக்க உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு அரசு அதிகாரிகளை அனுப்ப மாட்டோம்” என்று, வரிசையாக அறிவித்து உள்ளன.

இந்த நிலையில் தான், “சீனா மீது வீண் பழி போட்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அரசியல் செய்வதாக” அமெரிக்காவை சீனா கண்டித்து உள்ளது.

மேலும், “சீனாவில் நடக்க உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணிக்கும் நாடுகள், மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்றும், சீனா தற்போது எச்சரிக்கை விடுத்து உள்ளது. 

இதனிடையே, வரும் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை சீனாவின் பெய்ஜிங் நகரில், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.