லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அடுத்ததாக ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் கனெக்ட் படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான, ஹாரர் படமான மாயா திரைப்படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் அடுத்த ஹாரர் திரைப்படமாக வருகிறது கனெக்ட் .

இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகை சமந்தாவுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தயாராகி வருகிறது. தற்போது இத்திரைப்படத்தின் டப்பிங் மற்றும் இறுதிகட்ட பணிகளும்  நடைபெற்று வருகின்றன.

முன்னதாக மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் காட்ஃபாதர் திரைப்படத்திலும், பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிருத்விராஜுடன் இணைந்து கோல்ட் மலையாள திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா The Lip Balm Company எனும் புதிய  நிறுவனத்தை தொடங்கியுள்ளார். பிரபல தோல் மருத்துவர் Dr.ரெனிட்டா ராஜன் உடன் இணைந்து இந்த புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார் நயன்தாரா. The Lip Balm Company-யின் முன்னோட்டமாக புதிய வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ இதோ…