குழந்தை நட்சத்திராக அறிமுகமாகி தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என கலக்கி கொண்டிருப்பவர் கேப்ரியெல்லா கார்ல்டன்.விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி ஜூனியர் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் கேப்ரியெல்லா கார்ல்டன்.இந்த தொடரின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்க்க தொடங்கினார் கேப்ரியெல்லா கார்ல்டன்.

அடுத்ததாக விஜய் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான 7சியில் முக்கிய வேடத்தில் நடித்து பிரபலமானவராக மாறினார்.அடுத்ததாக 3,சென்னையில் ஒரு நாள்,அப்பா உள்ளிட்ட சில படங்களில் நடித்து அசத்தியுள்ளார் கேப்ரியெல்லா கார்ல்டன்.இதனை தொடர்ந்து ஜோடி நம்பர் 1 தொடரில் பங்கேற்று வெற்றி பெற்றிருந்தார் கேப்ரியெல்லா.

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று பட்ட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார் கேப்ரியெல்லா.தற்போது இவர் நசீரியலில் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரிய ஹிட் அடித்த தொடர் ஈரமான ரோஜாவே.

பவித்ரா ஜனனி,திரவியம் உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்த இந்த தொடர் 800 எபிசோடுகளை கடந்து பெரிய ஹிட் அடித்தது.இதன் இரண்டாவது சீசன் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.இதில் கேப்ரியெல்லா ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இதுகுறித்த அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.