ஜீ தமிழ் சீரியலில் ஹீரோயினாகும் விஜய் டிவி நடிகை !
By Aravind Selvam | Galatta | December 10, 2021 18:27 PM IST

மாடலாக தனது மீடியா பயணத்தை தொடங்கி சின்னத்திரையில் ஹீரோயினாக அசத்தி வருபவர் தேஜஸ்வினி கௌடா.கன்னட சீரியலில் ஹீரோயினாக நடித்து கவனம் ஈர்த்த இவர் அடுத்ததாக தெலுங்கில் ஒளிபரப்பான சீரியல் மூலம் தெலுங்கு சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார் தேஜஸ்வினி கௌடா.இந்த தொடரில் இவரது நடிப்புக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது,இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
மதிய நேரத்தில் ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட் அடித்தது.இந்த தொடர் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார் தேஜஸ்வினி கௌடா.இதனை தொடர்ந்து Care of Anausya என்ற தொடரில் நடித்து அசத்தி வருகிறார் தேஜஸ்வினி கௌடா.
தற்போது இவர் நடிக்கும் புதிய தமிழ் சீரியல் குறித்த தகவல் கிடைத்துள்ளது.ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள வித்யா நம்பர் 1 என்ற தொடரில் இவர் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த தொடரில் இனியன் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த தொடர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Ajith Kumar's Valimai gets a new BIG release announcement - Breaking! Check out!
17/12/2021 08:15 PM