தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் செல்வராகவன் முதல்முறை கதாநாயகனாக களமிறங்கியுள்ள திரைப்படம் சாணிக் காணிதம். செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ஆயுதம் படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். முன்னதாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் ராக்கி.

RA ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் மனோஜ்குமார் தயாரித்துள்ள ராக்கி திரைப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, தர்புகா சிவா இசையமைத்துள்ளார். வசந்த் ரவி மற்றும் இயக்குனர் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க டப்பிங் கலைஞர் ரவீனா ரவி மற்றும் நடிகை ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே வெளிவந்த ராக்கி திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. எனவே ராக்கி படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. 

இந்நிலையில் வருகிற டிசம்பர் 23-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள ராக்கி  திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக தற்போது வெளியானது. தொடர்ந்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.