கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போக்குவரத்து செலவுக்கு மாநில அரசாகிய நாங்கள் தான் பணம் கொடுத்தோம். ஆனால், மத்திய அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சிரமங்களைக் கண்டுகொள்ளவில்லை‘ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.


மேலும் அவர், ‘’அவர்களின் நினைப்பு முழுக்க கட்சி மாறும் தலைவர்கள் மீது தான் உள்ளது. கட்சி மாறும் தலைவர்களை புதுடெல்லிக்கு வரவழைப்பதற்கு மட்டும் அவர்கள் செலவு செய்கிறார்கள். இதுதான் பாஜகவின் உண்மையான நிறம்.  நாட்டின் வளங்களைத் தனியாருக்கு விற்கிறார்கள். பொதுத்துறை நிறுவனங்கள், காப்பீடு, ரயில்வே மற்றும் துறைமுகங்கள் என அனைத்தையும் விற்கிறார்கள்.


அவர்கள் தாக்கல் செய்த பட்ஜெட் முழுக்கவும் மக்கள் விரோதமாகவும் மற்றும் நாட்டுக்கு எதிரான பட்ஜெட்டாகவும் அமைந்துள்ளது. மக்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டுள்ளதாக இருக்கிறது. பல கோடி ரூபாய்க்காக அசையாத சொத்துகளையே தள்ளுபடி செய்ய இந்த அரசால் முடிகிறதென்றால், பிறகு வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது?” என்றுள்ளார்.