சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக 2020 பொங்கலுக்கு வெளியான தர்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து விஸ்வாசம் பட இயக்குனர் சிவா இயக்கத்தில் தயாராகி வந்த அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் நயன்தாரா,சதிஷ்,சூரி,கீர்த்தி சுரேஷ்,பிரகாஷ் ராஜ்,மீனா,குஷ்பூ உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இந்த படம் பெற்று வருகிறது.உலகமெங்கும் வசூல் சாதனையை இந்த படம் நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல சினிமா டிக்கெட் புக்கிங் நிறுவனமான புக் மை ஷோ நிறுவனம் இரண்டாவது கொரோனா அலைக்கு பிறகு ஒரு மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்ட படமாக அண்ணாத்த உருவெடுத்துள்ளது என்று தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.