திருமணமான மறு நாளே தோழியுடன் இளம் பெண் ஓட்டம் பிடித்ததால், இதனை கேள்விப்பட்ட புது மாப்பிள்ளை மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கேரள மாநிலம் திருச்சூர் அடுத்த சாவக்காடு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அங்குள்ள பழுவில் என்ற இடத்தை சேர்ந்த 23 வயதான இளம் பெண் ஒருவருககும் கடந்த மாதம் 25 ஆம் தேதி இரு வீட்டார் முறைப்படி திருமணம் நடந்து உள்ளது. 

அதனையடுத்து, திருமணம் முடிந்த மறுநாள் புதுமணத் தம்பதியினர் அருகில் உள்ள வங்கிக்கு சென்று உள்ளனர். அப்போது, இளம் பெண் போன் செய்து விட்டு வருவதாக கூறிவிட்டு, கணவரின் செல்போனை வாங்கிக் கொண்டு வெளியே வந்திருக்கிறார்.

ஆனால், போன் செய்துவிட்டு வங்கியை விட்டு வெளியே சென்ற மனைவி, நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவே இல்லை. இதனால், சந்தேகம் அடைந்த அந்த அப்பாவி கணவன், வெளியே வந்து பார்த்த போது தனது மனைவி அங்கு இல்லாதது கண்டு கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார்.

இதனால், இன்னும் அதிர்ச்சி அடைந்த அந்த புது மாப்பிள்ளை, தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கூறியுள்ளார். இது குறித்து விரைந்து வந்த உறவினர்கள், அந்த பெண்ணை அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்து விட்டு, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இளம் பெண்ணுக்கு ஒரு தோழி இருப்பதும், அவர்கள் இரண்டு பேரும் உயிருக்கு உயிராக பழகி வந்ததும், சம்பவத்தன்று அந்த இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதும் தெரிய வந்தது. 

அத்துடன், அந்த இளம் பெண் செல்லும் போது, வங்கியில் இருந்து எடுத்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 16 பவுன் தங்க நகையையும் கொண்டு சென்றதும் தெரிய வந்தது. 

இப்படியாக, திருமணமான மறுநாள் மனைவி, தோழியுடன் குடும்பம் நடத்த தப்பிச் சென்ற சம்பவத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்து போன அந்த அப்பாவி கணவன், அங்கேயே மயங்கி விழுந்து உள்ளார். 

இதனையடுத்து, மயங்கி விழுந்த அவரை உடனடியாக திருச்சூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

மேலும், திருமணம் ஆன மறுநாளே கணவனை விட்டு தோழியுடன் ஓடிப்போன புதுப்பெண் மற்றும் அவரது தோழி ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், தப்பிச் சென்ற மணப்பெண், தனது தோழியுடன் மதுரையில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்த குறித்து கேள்விப்பட்டு, அங்கு சென்ற  பெண்ணின் தந்தை மற்றும் போலீசார், அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தோழிகள் 2 பேரும் மிக நெருக்கமாக பழகி வந்து உள்ளனர். இவர்கள் 2 பேரும் சேர்ந்து வாழ முடிவு செய்து உள்ளனர். ஆனால், பணம் தேவைப்படும் என்பதால், திருமணம் வரை காத்திருந்து அதன் பிறகு தப்பிச் சென்று இருவரும் குடும்பம் நடத்தி ஒன்றாக சேர்ந்து வாழ திட்டமிட்டு உள்ளனர்.

இதையடுத்து, புதுப்பெண்ணையும், அவரது தோழியையும் அழைத்துச் சென்ற போலீசார், அவர்கள் இருவருககும் அறிவுரைகள் கூறி அவர்களது பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, புதுப்பெண்ணுடன் சென்ற தோழியும், திருமணமாகி அடுத்த 15 நாளில் கணவரை விவாகரத்து செய்தவர் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.