ஆபாச படம் பார்த்து மனைவியை தினமும் தொந்தரவு செய்து வந்த கணவன் மீது, அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை உள்ள ஜெய் நகரைச் சேர்ந்த 36 வயதான செஸ்தா என்ற பெண், அந்த பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞரை கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு, அவர்கள் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர். 

அத்துடன், திருமணத்தின் போது இவர் வரதட்சணையாக 1 லட்சம் மதிப்புள்ள தங்கமும், 2 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் பெற்றதாகவும் கூறப்படுகிறது. 

திருமணத்திற்கு பிறகு, சந்தோசமாக சென்ற இவர்களது வாழ்க்கையில், சுரேஷ் ஒரு கட்டத்தில் ஆபாசப் படம் பார்க்கும் கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால், அவர் அடிக்கடி ஆபாசப் படம் பார்த்து வந்து, தனது மனைவியை தினமும் தொந்தரவு செய்ய தொடங்கி உள்ளார்.

இந்த சூழலில் தான் கணவனின் ஆபாசப் படம் பார்க்கும் பழக்கம் பற்றி, அவரது மனைவி செஸ்தாவுக்கு தெரிய வந்தது. 

அத்துடன், இரவு நேரத்தில் கால் கேர்ள்களுடன் ஆன்லைன் ஆபாச அரட்டைகளில் சுரேஷ் ஈடுபட்டு வந்ததையும், அவர் மனைவி கண்டுப்பிடித்தார்.

அதன் பிறகு இது பற்றி அந்த பெண் தனது கணவரிடம் கேட்டு உள்ளார். இதனால், சற்று அதிர்ச்சியடைந்த அந்த கணவன், தனது மனைவியை வீட்டில் அடைத்து வைத்து, பழைய கெட்டு போன உணவுகளை கொடுத்து சாப்பிட சொல்லியும், தினமும் அடித்தும் உதைத்தும் கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார்.

மேலும், தனது மனைவியினட போட்டோவை கால் கேர்ள் வெப்சைட்டில் வெளியிட்டும், தன்னை விவகாரத்தானவர் என்று கூறியும், அந்த பகுதியில் உள்ள ஒரு மேட்ரிமோனியல் தளத்தில் பதிவிட்டும், இணையத்தில் பல பெண்களுடன் பேசியும் பழகியும் அவர் வந்திருக்கிறார். 

இதனால், அந்த பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, கடும் நரக வேதனையை அனுபவித்து வந்திருக்கிறார். 

முக்கியமாக, கணவனின் இந்த கொடுமைகள் பற்றி கணவனின் பெற்றோரிடம் கூறியபோது, அவர்கள் கணவனுக்கு ஆதரவாக பேசி உள்ளனர். 

இதனால், இந்த எப்படியாவது உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில், கணவன் வீட்டில் இருந்து தப்பி வந்த அந்த பெண், அங்குள்ள காவல் நிலையத்திற்கு நேராக சென்று தனது கணவன் மீது பரபரப்பு புகார் அளித்தார். இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சுரேஷிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.