ட்ரெண்ட் அடிக்கும் கவினின் ஆகாஷ்வாணி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் !
By Aravind Selvam | Galatta | November 06, 2021 14:26 PM IST
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளராகும்,சீரியல் நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின்.பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்தார் கவின்.சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.
இதனை அடுத்து இவர் நடித்த அஸ்கு மாறோ என்ற ஆல்பம் பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் இவர் நடித்த லிப்ட் படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.
சமீபத்தில் இந்த படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.படங்களில் நடிப்பது மட்டுமின்றி டாக்டர்,Beast உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி அசத்தி வருகிறார் கவின்.அடுத்ததாக கவின் ஆகாஷ் வாணி என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.
ரெபா மோனிகா ஜான் இதில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த சீரிஸை அட்லீயின் உதவி இயக்குனரான Enoc Able இயக்குகிறார்.இந்த சீரிஸின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.தற்போது இந்த சீரிஸின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சில வெளியிடப்பட்டு சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வருகின்றன.இந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Watch the highly anticipated teaser of Kamal Haasan's Vikram here!
06/11/2021 06:08 PM
Official: Shruti Haasan to romance Nandamuri Balakrishna in her next film!
06/11/2021 10:35 AM