கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகக் காவல் நிலையம் சென்ற இளம் பெண்ணை, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரின் வாழ்க்கையை நாசமாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் இட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு, கடந்த ஆண்டு இறுதியில் அங்குள்ள சக்ரா நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் இரு வீட்டார் முறைப்படி திருமணம் நடந்துள்ளது.

திருமணத்திற்குப் பிறகு, நன்றாக வாழ்ந்து வந்த புதுமண தம்பதியருக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்படவே, கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி தன் கணவர் மீது புகார் அளிப்பதற்காக, அந்த பெண் அங்குள்ள காவல் நிலையம் சென்று இருக்கிறார். 

அப்போது, காவல் நிலையத்தில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அந்த இளம் பெண், தனது கணவன் மீது புகார் அளித்திருக்கிறார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட அந்த  போலீஸ் இன்ஸ்பெக்டர், இட்டாவா நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அந்த பெண்ணை தனது காரில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று உள்ளார். 

விடுதிக்கு சென்றதும், அங்கு உள்ள ஓட்டல் அறையில் வைத்து அந்த இளம் பெண்ணை பலவந்தப்படுத்தி அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. 

அத்துடன், கொடூரத்தின் உச்சமாக, அந்த இளம் பெண்ணை பலாத்காரம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர், இந்த பாலியல் பலாத்கார காட்சிகளை எல்லாம் தனது செல்போனில் அவர் வீடியோாவாகவும் எடுத்து வைத்துக்கொண்டு, அந்த பெண்ணை மிரட்டி இருக்கிறார்.

மேலும், இந்த வீடியோக்களை வைத்து, தொடர்ந்து மிரட்டி வந்த அவர், அந்த பெண்ணை நினைக்கும் போதெல்லாம் நேரில் வரவழைத்துப் பல முறை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, தொடர்ந்து அவர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். 

அதுவும், போலீஸ் அதிகாரியிடம் தனது சம்பந்தப்பட்ட அந்தரங்க வீடியோக்கள் இருப்பதால், அந்த பெண்ணுக்கு வேறு வழிதெரியவில்லை. இதனால், அந்த இன்ஸ்பெக்டர் சொல்லும் படியெல்லாம் அந்த பெண் நடந்துகொண்டிருக்கிறார்.

இந்த சூழுலில் தான், கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த பெண்ணின் கணவருக்கே போன் செய்து, “உன் மனைவியை அழைத்து வராவிட்டால், என்னிடம் உள்ள உன் மனைவியின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவதாக” மிரட்டியிருக்கிறார்.

இந்த நிலையில் தான்,  போலீஸ் இன்ஸ்பெக்டரின் கொடுமையைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்த பெண்ணின் தந்தை, அங்குள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து புகார் அளித்திருக்கிறார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர், போலீஸ் இன்ஸ்பெக்டர் தொடர்பான புகார் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது தான், போலீஸ் இன்ஸ்பெக்டர் தொடர்பான விசயங்கள் வெளியுலகிற்கு அம்பலமானது. 

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பொது மக்கள் மத்தியில் பெரும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.