விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று ஆபீஸ்.இந்த தொடரில் நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் பவித்ரா ஜனனி.இதனை தொடர்ந்து ராஜா ராணி,சரவணன் மீனாட்சி சீசன் 2 மற்றும் 3 உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்து அசத்தினார் பவித்ரா.

தொடர்ந்து சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் பவித்ரா ஜனனி.இடையில் சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று அசத்தினார் பவித்ரா ஜனனி.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே தொடரில் ஹீரோயினாக நடித்தார் பவித்ரா.

இந்த தொடர் 800 எபிசோடுகளை கடந்து ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிந்தது.இந்த தொடரின் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் பவித்ரா.அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பை தொடங்கியுள்ள தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் பவித்ரா ஜனனி அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.தற்போது சின்னத்திரையில் கலக்கி வரும் இவர் விரைவில் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார் என்றும் அதன் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.