பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகிப் போன 12 வயது சிறுமியை, அவருக்கு சிகிச்சை அளிக்க வந்த டாக்டரே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடுமையான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் இருக்கும் சான்டாக்ரூஸ் வெஸ்டில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கில் குழந்தை சிகிச்சை மருத்துவராக டாக்டர் ஹரிஷ் பாடிகர் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர், குழந்தைகள் சிறப்பு பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் என்பதால், இவரிடம் அந்த பகுதியைச் சேர்ந்த பலரும் சிகிச்சைக்கு வருவது வழக்கம். 

அப்போது, அங்கு அந்த பகுதியைச் சேர்ந்த 12 வயதான சிறுமி ஒருவர், பக்கவாதம் வந்து பாதிக்கப்பட்ட நிலையில், முடங்கிப் போய் அந்த டாக்டரிடம் சிகிச்சை பெற கடந்த ஒரு ஆண்டாக சிகிச்சைக்கு வந்திருக்கிறார்.

அந்த சிறுமிக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக ஜப்பானிய மூளைக் காய்ச்சல் என்கிற அரிய நோய் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், அந்த சிறுமி எப்போதும் படுத்த படுக்கையாக இருந்து வந்தார். 

அத்துடன், அந்த சிறுமியால் தனது கைகால்களை கூட அசைக்க முடியாத நிலை இருந்தது. 

முக்கியமாக, அந்த சிறுமி அசாமிற்கு விடுமுறை தினங்களில் சென்ற போது, அங்குள்ள கொசு கடித்த காரணத்தால், அந்த சிறுமிக்கு இப்படி ஒரு விநோதமான நோய் தொற்று ஏற்பட்டது தெரிய வந்தது. 

அதன் பிறகு அந்த சிறுமியை, அவரின் பெற்றோர் தினமும் அந்த டாக்டரிடம் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். அப்போதெல்லாம், அந்த டாக்டர் ஹரிஷ், அந்த சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார் என்று கூறப்படுகிறத. ஆனால், அந்த சிறுமியோ இது பற்றி தனது பெற்றோரிடம் எதுவும் கூறாமல் பயத்திலேயே இருந்து வந்துள்ளார். 

ஆனால், அந்த டாக்டரின் பாலியல் தொல்லைகள் எல்லை மீறி போகவே, பாலியல் தொல்லையால் ஏற்படும் வலிகளை பொறுத்துக்கொள்ள முடியாமல், இந்த கொடுமைகள் குறித்து தனது பெற்றோரிடம் அந்த சிறுமி கூறி கதறி அழுதுள்ளார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த டாக்டர் மீது புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட அந்த டாக்டரை அதிரடியாக கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.