தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக பல வருடங்களாக மக்கள் மனதில் ஆட்சி செய்து வருபவர் மெகாஸ்டார் சிரஞ்சீவி.தனது நடிப்பால்,நடந்தால் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ரசிகர்களை மகிழ்வித்து வரும் இவருக்கு உலகமெங்கும் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

2008-ல் இருந்து சினிமாவிற்கு பிரேக் விட்டு அரசியலில் இறங்கினார் சிரஞ்சீவி.சில வருடங்கள் உத்வேகமாக அரசியலில் இறங்கிய சிரஞ்சீவி பின்னர் மீண்டும் கத்தி படத்தின் ரீமேக்கான கைதி நம்பர் 150 படத்தின் மூலம் சினிமாவில் தனது ரீ என்ட்ரியை கொடுத்தார்.கிட்டத்தட்ட 10 வருட இடைவேளைக்கு பிறகு வந்தும் சிரஞ்சீவிக்கான மவுசு குறையாமலேயே இருந்தது.

இதனை தொடர்ந்து இவர் நடித்த Sye Raa Narasimha Reddy படமும் பெரிய வெற்றி பெற்றது.இதனை தொடர்ந்து கொரட்டலா சிவா இயக்கத்தில் தயாராகி வரும் ஆச்சார்யா படத்தில் நடித்துள்ளார் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது,அடுத்ததாக வேதாளம் ரீமேக் Bholaa Shankar படத்தில் நடிக்கவுள்ளார்.

தற்போது இவர் நடிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.மெகா 154 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை பாபி இயக்குகிறார்.தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.