பிரதமர் மோடியின் பயன்பாட்டுக்காக விலையுயர்ந்த புதிய மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 ரக கார் வாங்கப்பட்டுள்ளது. இக்காரின் விண்டோ கண்ணாடிகள், ஸ்டீல் கோர் புல்லட்களால் சுட்டாலும் துளைக்கமுடியாத விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

Mercedes-Maybach 650 car modi

ரேஞ்ச் ரோவர், லேண்ட் குரூசர் மற்றும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்களுடன் பிரதமரின் கான்வாயில் புத்தம் புதிய மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 ரக காரும் சமீபத்தில் இணைந்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகின் செல்வாக்குமிக்க நபர்களில் ஒருவராக விளங்குவதாலும் இந்தியாவில் VVIP  என்னும் மிக முக்கியமான நபர்களில் ஒருவராக உள்ளார். குடியரசுத் தலைவர் உட்பட நாட்டின் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் SPG பாதுகாப்பின் ஒரு பகுதியாக விரிவான பாதுகாப்பு  கொடுக்கப்படுகிறது.  

இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்திருந்த போது ஹைதராபாத் இல்லத்தில் அவரை வரவேற்க பிரதமர் மோடி வந்திருந்த போது மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 காரில் அவர் முதல் முறையாக வந்திருந்தார். சமீபத்தில் அவருடைய இந்த புதிய காரை மீண்டும் பார்க்க முடிந்தது. தனக்கு தேவையான காரை பிரதமர் கேட்டுப்பெறுவதில்லை. அவருக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் நிலைமைக்கு தகுந்தவாறு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காரை தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படித்தான் இந்த கார் பிரதமருக்காக வங்கப்பட்டுள்ளது. இரண்டு மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 ரக கார்கள் தற்போது பிரதமரின் கான்வாயில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Maybach 650, இந்தியாவின் மிக விலையுயர்ந்த  கவச வாகனம் ஆகும். இதன் விலை ரூ.12 கோடி  என கூறப்படுகிறது. இந்த கார் தோட்டாக்கள் மற்றும் குண்டுவெடிப்புகளை தாங்கும் VR10 மற்றும் ERV 2010 மதிப்பீட்டைப் பெறுகிறது.  VR10 என்பது உலகெங்கிலும் உள்ள எந்தவொரு சிவிலியன் வாகனத்திலும் வழங்கப்படும் மிக உயர்ந்த பாதுகாப்பாகும். மேலும் கார் தோட்டாக்கள் இரண்டு மீட்டர் தூரத்தில் இருந்து 15kg TNT  வெடி குண்டு தாக்குதலையும் தாங்கும் வண்ணம் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் அதன் சக்கரங்கள் பஞ்சர் ப்ரூஃப் ஆக உள்ளது. Mercedes-Maybach 650 Guard கார் 6.0 லிட்டர் V12 ட்வின் டர்போசார்ஜ்டு எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 523 bhp பவரையும், 830 Nm டார் திறனையும் உருவாக்குகிறது. இந்த காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 160 கிமீ என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புதிய Mercedes-Maybach S600 Pullman Guard காரில் பயணம் செய்கிறார். இது VR9-நிலை பாதுகாப்பை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இக்காரின் விண்டோ கண்ணாடிகள் ஸ்டீல் கோர் புல்லட்களால் சுட்டாலும் துளைக்கமுடியாத விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. வெடி குண்டு தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது. இந்தக் காரின் எரிபொருள் டேங்க் விஷேச உலோகத்தால் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏதேனும் தாக்குதல்களில் ஏற்படும் ஓட்டைகள் தானாகவே சரிசெய்துகொள்ளும். AH-64 Apache tank attack ஹெலிகாப்டர்களின் பயன்படுத்தப்படும் உலோகத்தில் தான் இந்தக் காரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் காரின் டயர்கள் ஆபத்து நேரங்களில் பாதிப்படைந்தாலும் தொடர்ந்து இயங்கும் தன்மை கொண்டதாகும். சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் மோடி மேபேக் கூலிங் கிளாஸ்களை அணிந்திருந்தது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இன்று அவரின் கான்வாயில் விஷேச பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புத்தம்புதிய மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 கார் இணைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காரில் தான் பிரதமர் மோடி பயணிக்கிறார்.