மணிப்பூர் மாநிலத்தில், முதல் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர் என மாநில அரசுத் தெரிவித்துள்ளது.

omicron

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும் கடந்த 2-ம்  தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2 பேருக்கு பரவியதின் மூலம் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் நாட்டில் அடியெடுத்து வைத்தது. கர்நாடகாவை தொடர்ந்து மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு என வேகமாக ஒமிக்ரான் வகை கொரோனா பரவத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கூறியதாவது: “ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் வாரந்தோறும் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், ஆசியாவில் இந்த எண்ணிக்கை குறைந்து வருகின்றன. இந்தியாவில் தற்போது கோவிட் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் அதிகளவில் உள்ள மாநிலங்களில் கேரளா, மகாராஷ்ட்ரா, தமிழகம், மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்தியாவின் 17 மாநிலங்களில் இதுவரை 358 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் இந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக இதுவரை 450-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் முதல் முறையாக ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர் என்று அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.