தமிழ் திரையுலகில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்ததாக காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தயாராகி வருகிறது.காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா மூவரும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

எஸ்.எஸ்.லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவுள்ளது. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர், இளையதிலகம் பிரபு , ரெட்டின் கிங்ஸ்லீ மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் இளையதிலகம் பிரபு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் , காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் புதிய போஸ்டரை பகிர்ந்து, “அன்பிற்குரிய, இனிமையான பிரபு சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார். ட்ரெண்டாகும் அந்த புதிய போஸ்டர் இதோ...