தமிழ் திரையுலகின் பிரபல இளம் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் முருங்கக்காய் சிப்ஸ். இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் வெளிவந்த முருங்கக்காய் சிப்ஸ் திரைப்படம் கலகலப்பான நகைச்சுவை திரைப்படமாக பலரது கவனத்தை ஈர்த்தது.

அடுத்ததாக மதயானைக்கூட்டம் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகும் ராவணன் கூட்டம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் சாந்தனு. இதனிடையே நடிகர் சாந்தனு மற்றும் நடிகை மஹிமா நம்பியார் இணைந்து நடித்த குண்டுமல்லி பாடல் வீடியோ தற்போது வெளியானது.

நடிகர் ஆதவ் கண்ணதாசன் இயக்கியுள்ள குண்டுமல்லி பாடலை ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைத்துள்ளார். விவேக் ரவி வரிகளுக்கு ஜெரார்ட் ஃபெலிக்ஸ் மற்றும் நித்யஸ்ரீ வெங்கட்ரமணன் இணைந்து பாடியுள்ள இந்த குண்டுமல்லி பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MKRP புரொடக்ஷன்ஸ் சார்பில் M.K. ராம்பிரசாத் தயாரித்துள்ள குண்டுமல்லி பாடலுக்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய கார்த்திக் மனோரமா படத்தொகுப்பு செய்துள்ளார். பிரபல நடன இயக்குனர் ரகுராம் நடன இயக்கம் செய்துள்ளார். கவனத்தை ஈர்க்கும் குண்டுமல்லி பாடல் வீடியோ இதோ…