மாடல் ஆக தனது பயணத்தை தொடங்கி விளம்பர படங்கள் குறும்படங்கள் உள்ளிட்டவற்றில் நடித்து இப்போது சீரியல் நடிகையாக அசத்தி வருபவர் பவ்யாஸ்ரீ.ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர் திருமதி ஹிட்லர்.அமித் பார்கவ் மற்றும் கீர்த்தனா முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.

200 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் சித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார் பவ்யாஸ்ரீ.இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உருவானது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் பவ்யா தனது புகைப்படம் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.தற்போது தான் நடிக்கும் புதிய சீரியல் குறித்து ஒரு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் பவ்யாஸ்ரீ.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம ஹிட் தொடர்களில் ஒன்று செம்பருத்தி.ஷபானா,ப்ரியா ராமன் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த தொடர் 1200 எபிசோடுகளை நெருங்கி வருகிறது.இந்த தொடரில் புதுவராவாக இணைந்துள்ளார் பவ்யாஸ்ரீ.புது சீரியலில் இணைந்த இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

thirumathi hitler fame bhavya shri new entry in sembaruthi serial shabana