மலேசியா வாழ் தமிழரான முகேன் ராவ் தமிழில் பல சுயாதீன பாடல்களை பாடி, நடித்து  பிரபலமடைந்தவர். குறிப்பாக விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்று சின்னதிரை வாயிலாக வெள்ளித்திரையில் நுழைந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் கதாநாயகனாக களமிறங்கியுள்ள முகென் ராவ் அடுத்ததாக ஷீரடி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், வெப்பம் படத்தின் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் உருவாகும் மதில் மேல் காதல் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.முன்னதாக முகேன் ராவ் கதாநாயகனாக அறிமுகமான வேலன் திரைப்படம் வருகிற டிசம்பர் 31-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

இயக்குனர் கவின் இயக்கத்தில் உருவாகியுள்ள வேலன் படத்தை ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் தயாரித்துள்ளார். முகென் ராவுக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்க, பிரபு,ஹரீஷ் பரேடி,தம்பி ராமய்யா,சூரி,மரியா வின்சென்ட்,பிரிகிடா,ப்ராங்க் ஸ்டார் ராகுல்,பில்லி முரளி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். 

வேலன் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது வேலன் திரைப்படத்தின் என்னை ஆளும் பெண்ணிலவே ரொமான்டிக் பாடல் வீடியோ வெளியானது. பிக் பாஸ் முகெனின் வேலன் பட என்னை ஆளும் பெண்ணிலவே பாடல் வீடியோ இதோ...