விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி வழக்கம் போல் இந்த முறையும் ரசிகர்களின் பேராதரவோடு 70 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக நகர்கிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் எலிமினேஷன்கள் மற்றும் வைல்ட் கார்ட் என்ட்ரிகளைக் கடந்து தற்போது 12 போட்டியாளர்களுடன் தொடர்கிறது.

கடந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் மாநாடு லக்சரி பட்ஜெட் டாஸ்க் தொடங்கியது மூன்று கட்சிகளாக 12 போட்டியாளர்களும் பிரிந்து அரசியல் காரசாரமான விவாதங்கள் மற்றும் தேர்தல் என மாநாடு லக்சரி பட்ஜெட் டாஸ்க் நிறைவடைந்தது. இந்தவார எவிக்சனுக்கு சிபி, அக்ஷரா,நிரூப், அமீர், தாமரை, இமான் அண்ணாச்சி, அபிநய்  ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இவர்களிலிருந்து இமான் அண்ணாச்சி இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்தன. 

முன்னதாக இந்த பிக் பாஸ் சீசனில் அடிக்கடி நிகழும் விவாதப் பொருளாக இருப்பது பாவனி & அபிநய் இடையிலான நட்புறவு. குறிப்பாக, மற்ற போட்டியாளர்கள் அவர்களுக்குள் கிசுகிசுத்து கொண்டிருந்த இந்த நட்புறவை ஒரு சிறிய டாஸ்கில் ராஜு, “காதலா” என கேட்க அன்று முதல் புகைக்க தொடங்கிய இந்த விவாதம் இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்கின் போது பாவனியின் கோபத்தில் வெடித்தது.

இதுகுறித்து நேற்றைய(டிசம்பர் 11) நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசனும் சரமாரி கேள்விகளை ராஜூ மற்றும் ஹவுஸ்மேட்ஸ்களின் முன் எடுத்து வைக்க இந்தப் பிரச்சினை கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இன்றைய(டிசம்பர் 12) நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோவில் பாவனி, அபிநய் உடனான உறவு குறித்து ராஜு உடன் பேசிய குறும்படத்தால் வசமாக சிக்கிக்கொண்டார். சமூக வலைதளங்களில் வைரலாக அந்த புதிய ப்ரோமோ வீடியோ இதோ…