தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான கார்த்திக் குமார் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து வானம் வசப்படும், கண்ட நால் முதல், தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, சீயான் விக்ரமின் தெய்வத்திருமகள், நினைத்தாலே இனிக்கும் மற்றும் வெப்பம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகனாகும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த stand-up காமெடியனாக பிரபலமடைந்த கார்த்திக் குமாரின் stand-up காமெடி நிகம்ச்சிளுக்கு என்று இந்திய அளவில் மிகப்பெரிய  ரசிகர்கள் பட்டாளமே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் கார்த்திக் குமார் தற்போது பிரபல நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

கள்ளச் சிரிப்பு படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை அம்ருதா, இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ் & பிரியா பவானி ஷங்கர் நடித்த மேயாத மான், நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்த தேவ் மற்றும் ஜீவா நடித்த கதாநாயகனாக கீ உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமடைந்தவர்.

இந்நிலையில் நடிகர் கார்த்திக் குமார் மற்றும் நடிகை அம்ருதாவின் திருமணம் சென்னையில் தற்போது நடைபெற்றுள்ளது. கார்த்திக் குமார் & அம்ருதா புதுமண தம்பதியை கலாட்டா குழுமம் வாழ்த்துகிறது. மேலும் திரையுலகைச் சேர்ந்த பலரும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
stand up comedian and actor karthik kumar gets married actress amrutha