தமிழ் சினிமாவின் பிரபல இளம் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் வருண் ஜெயம் ரவி நடித்த போகன், வனமகன், கோமாளி மற்றும் ஜீவாவின் சீறு,  RJ பாலாஜியின் LKG உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் பப்பி திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வருகிறார். முன்னதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் வருண் கதாநாயகனாக நடித்த திரைப்படம் ஜோஷ்வா இமைபோல் காக்க.

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் அவர்கள் தயாரித்துள்ள ஜோஷ்வா இமைபோல் காக்க படத்திற்கு S.R.கதிர் ஒளிப்பதிவில் கார்த்திக் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக ராஹேய் நடிக்க நடிகர் கிருஷ்ணா,திவ்ய தர்ஷினி (DD) மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ஜோஷ்வா இமைபோல் காக்க படத்திலிருந்து டப்பாசு நேரம் எனும் புதிய பாடல் தற்போது வெளியானது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கார்த்திக் இசையமைத்துள்ள ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தின் டப்பாசு நேரம் பாடல் இதோ…