டேட்டிங் செயலியால் நேர்ந்த சோகம்.. மது குடிக்க வைத்து விமானப் பணி பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தைச் சேர்ந்த பிம்ப்ரி சிஞ்ச்வாத் என்னும் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம் பெண் ஒருவர், விமானப் பணி பெண்ணாக பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. 

இந்த பெண், பணி நேரம் போக மற்ற நேரங்களில் எப்போதுமே ஆன்லைனிலேயே மூழ்கிக் கிடந்துள்ளார். சமூக வலைத்தளங்களிலேயே இவருக்கு அதிகம் நாட்டம் இருந்துள்ளது.

முக்கியமாக, ஆன்லைன் டேட்டிங் செயலி மூலமாக விளையாட்டாக சாட்டிங்கில் இந்த பெண் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அப்போது, இந்த ஆன்லைன் டேட்டிங் செயலி மூலமாக அதே மாநிலத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர், இந்த இளம் பெண்ணுக்கு அறிமுகம் ஆகி உள்ளார்.

இதனையடுத்து, அவர்கள் இருவரும் மணிக்கணக்கில் சாட்டிங்கில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் தங்களது செல்போன் எண்களை பகிர்ந்துகொண்ட அவர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

திட்டமிட்டபடி, அவர்கள் நேற்றைய தினம் இரவு உணவிற்காக இருவரும் வெளியே சந்தித்து உள்ளனர். அப்போது, அந்த இளம் பெண்ணை அவர் கவர முயன்றுள்ளார்.

அத்துடன், அந்த பெண்ணை மது அருந்தும் படி அந்த இளைஞர் கட்டாயப்படுத்தி உள்ளார். அதன்படியே, அந்த பெண்ணும் வேறு வழியின்றி மது அருந்தியதாகத் தெரிகிறது. இதனையடுத்து, அந்த பெண்ணை, அவரது வீட்டில் இறக்கி விடுவதாகக் கூறி விட்டு அந்த பெண்ணின் வீட்டிற்கு அழைத்துச் சென்று உள்ளார். 

அப்போது, அந்த வீட்டில் யாரும் இல்லாததால், அந்த இளம் பெண்ணும் சற்று மது மயக்கத்தில் இருந்ததாலும், அந்த இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி அந்த இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன், அந்த பெண்ணிற்கு அவர் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், அந்த ஆண் நண்பர் குறித்து, புனேவில் உள்ள வகாட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்து, அந்த இளைஞரைக் கைது செய்தனர். இதனையடுத்து, அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், அந்த இளைஞர் மீது போலீசார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணையில், “ஆன்லைன் டேட்டிங் செயலி மூலமாக இந்த இளம் பெண்ணுடன், அந்த இளைஞருக்குப் பழக்கம் ஏற்பட்டு என்றும், அதன் மூலமாகவே இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்து போது, இரவு உணவிற்காக இருவரும் வெளியே சென்று உள்ளனர். அப்போது, அந்த பெண்ணை மது அருந்தும்படி அந்த இளைஞர் கட்டாயப்படுத்தி, வீட்டில் இறக்கி விடுவதுபோல், அந்த இளம் பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததும்” தெரிய வந்தது. 

இதனையடுத்து, அந்த இளைஞரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.