16 வயதுக்கு உட்பட 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், அரசு என்ஜினியர் மற்றும் அவரின் மனைவியை போலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

உத்தரபிரப் தேசம் மாநிலத்தைச் சேர்ந்த ரம்பவன் என்பவர், அந்த பகுதியில் அரசு என்ஜினியராக பணியாற்றி வந்தார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த மாதம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்கள் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் அதிரடியாக அவர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அந்த மாநில போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் 5 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது.

முக்கியமாக, அங்குள்ள பண்டா, சித்ரகூட் மற்றும் ஹமீர்பூர் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகள் தான், அதிக அளவில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், அரசு என்ஜினியர் ரம்பவன் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் கிட்டத்தட்ட 8 செல்போன்கள், 8 லட்சம் ரூபாய் பணம், செக்ஸ் பொம்மைகள், 
ஒரு லேப்டாப், இன்னும் பிற டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சான்றுகளும் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன. இதனால், அரசு என்ஜினியர் கிடைத்த அனைத்தையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

முக்கியமாக, அந்த வீட்டில் ஏராளமான சிறுவர் பாலியல் துஷ்பிரயோக பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

அத்துடன், அந்த அரசு என்ஜினியரின் இமெயில் முகவரியைச் சோதனை செய்ததில், அவர் அதிகம் வெளி நாட்டினருடன் தொடர்பு கொண்டிருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, அரசு என்ஜினியர் ரம்பவன் மனைவி துர்காவதியை, சிபிஐ அதிகாரிகள் தற்போது கைது செய்துள்ளனர். அவர், தன் கணவருக்கு உதவி செய்ததாகவும், சாட்சிகளைக் கலைத்து விடலாம் என்ற காரணத்திலும், தற்போது அவரை அதிகாரிகள் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே உத்தரப்பிரதேச அரசு என்ஜினியரின் மனைவியை சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடியாகக் கைது செய்து உள்ளனர்.  இதனையடுத்து, அவரிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு, அவர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார். நீதிமன்ற 

உத்தரவுப்படி அரசு என்ஜினியர் மனைவியை வரும் ஜனவரி 4 ஆம் துதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். அவரிடம், சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

குறிப்பாக, அரசு என்ஜினியர் ஒருவர், 16 வயதுக்கு உட்பட 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே, கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.