கள்ளக் காதலன் ஒருவன், தனது காதலி இல்லத நேரத்தில் அவரின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த ஷெர்பூரில் வசிக்கும் விஷால் குமார் என்பவர், அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

அப்போது, அவருக்கு அந்த பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. 

ஆனால் அந்த 35 வயதான பெண், தனது கணவரை பிரிந்து தன்னுடைய டீனேஜ் மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த சூழலில் தான், இந்த 35 வயதான பெண்ணிற்கு, டிரைவரான விஷால் குமார் அறிமுகம் ஆகி உள்ளார். இந்த அறிமுகம் நாளடைவில் இவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனால், இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் விஷால் குமார், தனது கள்ளக் காதலியுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழந்து வந்திருக்கிறார். இதனால், அவர்கள் வீட்டிற்கு எந்நேரமும் சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த நேரத்தில் தான், டிரைவர் விஷால் கள்ளக் காதலியின் டீனேஜ் பெண்ணுக்கும் தனது காதல் வலை விரித்திருக்கிறார்.

இந்த சூழலில் தான், கள்ளக் காதலன் விஷால், திடீரென்று வேலையை விட்டு நின்று உள்ளான்.

அப்போது, கடந்த 10 ஆம் தேதி திங்கள் கிழமை அன்று, டிரைவர் விஷாலின் கள்ள காதலியின் மகள் வீட்டில் தனியாக இருந்து உள்ளார்.

அப்போது, அங்கு வந்த விஷால், தனது கள்ளக் காதலியின் மகளை மிரட்டி பலவந்தமாக அவரை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான். 

அத்துடன், “இது பற்றி வெளியே யாரிடமும் எதுவும் சொல்லக் கூடாது” என்றும், அவன் மிரட்டி வந்திருக்கிறான்.

அதன் பிறகு, அடுத்த சில நாட்களில் அந்த சிறுமி இது பற்றி தனது தாயாரிடம் கூறி அழுதி இருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் தாயார், இது குறித்து விஷாலிடம் கேட்டு உள்ளார்.

அப்போது, தனது காதலியை பயங்கரமாக மிரட்டிய விஷால், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. 

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், இது குறித்து அங்குள்ள மோதி நகர் காவல் நிலையத்தில் காதலன் விஷால் மீது புகார் கொடுத்து உள்ளார். 

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தற்போது தலைமறைவாக இருக்கும் டிரைவர் விஷாலை வலை வீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே, கள்ளக் காதலன் ஒருவன், காதலி இல்லாத நேரத்தில், அவரது டீன் ஏஜ் மகளை பலவந்தமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.