வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் இளம் மனைவிகளை மயக்கி, அவர்களிடமிருந்து ஒரு கும்பல் மோசடியாக பணம் பறித்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கேரளா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.

அதற்கு சாட்சியாக முன்நிற்கிறது கேராளாவில் தற்போது அரங்கேறி இருக்கும் இந்த பயங்கர சம்பவம்.

கேரளாவைச் சேர்ந்த கும்பல் ஒன்று, அந்த பகுதியில் வெளிநாடுகளில் வேலை செய்யும் ஆண்களின் இளம் மனைவிகளை குறித்து வைத்து, அவர்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறது.

அதாவது, கணவன்மார்கள் வெளிநாட்டில் வேலைக்கு சென்றிருப்பதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த கும்பல், அந்த பெண்களின் தனிமையான சூழலை தெரிந்துகொண்டு, அந்த குடும்ப பெண்களின் செல்போன் எண்களுக்கு மிஸ்ட் கால் கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்து உள்ளனர்.

பின்னர், அந்த பெண்களிடம் இந்த கும்பல், நட்பாக பேசி, அவர்களை தங்களது வலையில் வீழ்த்துவதை வேலையாக வைத்திருந்து உள்ளனர்.

இப்படியாக, செல்போனில் ராங் நம்பராக அறிமுகமாகும் இந்த கும்பல், “நான் மருத்துவர் என்றும், இஞ்சினியர் என்றும், பொய்யாக எதாவது கூறி, அந்த பெண்களிடம் அவர்கள் அறிமுகமாகி, அந்த பெண்களை தங்களது வலையில் வீழ்த்தி வந்திருக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக, அந்த மோசடி ஆண் கும்பலானது, தங்களது மாட்டும் அப்பாவி பெண்களிடம் வேறு சில ஆண்களை அறிமுகம் செய்து வைத்து, “இவர்கள் எங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள்” என்றும், அந்த இளம் பெண்களிடம் அறிமுகம் செய்து வைத்தும் வந்திருக்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாகவே, அந்த அப்பாவி பெண்களிடம் கடனாக பணம், தங்க நகைகள் போன்றவற்றை பெற்றுகொண்டு, தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிடுவதையும் வாடிக்கையா வைத்து உள்ளனர்.

இந்த மோசடி கும்பலிடம் சமீபத்தில் 4 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 65 சவரன் நகைகளை பறிகொடுத்து ஏமார்ந்த திருமணம் ஆன இளம் பெண் ஒருவர், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்திய நிலையில், இந்த மோசடியில் தொடர்புடைய  அப்துல் சலாம், அஷ்ரஃப், ரஃபீக் ஆகிய 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.