தமிழ் திரையுலகில் நகைச்சுவை மன்னனாகவும் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் காமெடியனாகவும் மனதை கொள்ளையடித்த வைகைபுயல் வடிவேலு அவர்கள் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து பூரண குணமடைந்து சிகிச்சை முடித்து சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

நீண்ட காலமாக வடிவேலுவை திரையில் காண பலகோடி ரசிகர்கள் காத்திருந்த நிலையில், வைகை புயல் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள திரைப்படம் தான் நாய் சேகர் ரிட்டன்ஸ். பிரபல இயக்குனர் சுராஜ் இயக்கிய தலைநகரம் படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரத்தின் பெயரை கொண்டு உருவாகும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தையும் இயக்குனர் சுராஜ் இயக்குகிறார்.

திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி சிவாங்கி, நடிகர் ஆனந்தராஜ் மற்றும் VJ விக்னேஷ் காந்த் ஆகியோர் வடிவேலுவுடன் இணைந்து நடிக்கின்றனர். ஒருசில வாரங்களுக்கு முன்பு நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

தமிழ் சினிமாவின் சிறந்த இசை அமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் முன்னதாக சில நாட்களுக்கு முன் லண்டனில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்கான பாடல் கம்போசிங் பணிகள் தொடங்கியது. அந்த முதல்கட்ட கம்போசிங் பணிகளுக்கு சென்று திரும்பிய வடிவேலுவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 

இந்நிலையில் தற்போது மீண்டும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் பாடல் கம்போசிங் பணிகள் முழுவீச்சில் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் வைகைப்புயல் வடிவேலு,  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர் சுராஜ், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படத்தை படக்குழுவினர் தற்போது வெளியிட்டனர். அந்த புகைப்படம் இதோ…