இந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக விளங்கும் நடிகை டாப்சி  தமிழ், தெலுங்கு,ஹிந்தி என இந்தியாவின் பல்வேறு மொழி சினிமாவிலும் வித்தியாசமான கதைக்களங்களையும் சிறந்த கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர். அந்த வகையில் வரிசையாக டாப்ஸியின் நடிப்பில் அசத்தலான திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

முன்னதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான மிதாலி ராஜ்-ன் பயோபிக் திரைப்படத்தில் மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்துள்ள சபாஷ் மித்து & தெலுங்கில் மிஷன் இம்பாசிபிள் உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அடுத்து தமிழில் ஜன கண மன மற்றும் ஏலியன் உள்ளிட்ட படங்களில் டாப்ஸி நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் தோபாரா திரைப்படத்தையும் நடித்து முடித்துள்ள நடிகை டாப்ஸி தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கி உள்ளார். தனது அவுட்சைடர்ஸ் ஃபிலிம் தயாரிப்பில் உருவாகும் ஹாரர் த்ரில்லர் திரைப்படமான BLURR திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார். இந்த வரிசையில் அடுத்ததாக டாப்ஸியின் நடிப்பில் நேரடியாக நெட்ஃபிலிக்ஸில் ரிலீசாகிறது லூப் லப்பேட்டா திரைப்படம்.

சோனி பிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா தயாரித்துள்ள லூப் லப்பேட்டா இயக்குனர் படத்தை ஆகாஷ் பாட்டியா இயக்கியுள்ளார். டாப்ஸி உடன் இணைந்து தாஹிர் ராஜ் பாசின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, டிப்யெண்டு பட்டாச்சாரியா மற்றும் ஸ்ரேயா தன்வந்திரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லூப் லப்பேட்டா படத்திற்கு யாஷ் கண்ணா ஒளிப்பதிவில், கௌரவ் பரிக் இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில் இந்த 2022-ம் ஆண்டு வருகிற பிப்ரவரி 4ஆம் தேதி ரிலீசாக உள்ள லூப் லப்பேட்டா திரைப்படத்தின் கலக்கலான டிரைலர் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள லூப் லப்பேட்டா திரைப்படத்தின் டிரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.