நண்பரின் மனைவியை மயக்க மருந்து கொடுத்து மற்றொரு நண்பன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பஞ்சாபில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள புனித் நகரில் வசிக்கும் தீரஜ் என்ற இளைஞர், தனது நண்பன் உடன் தினமும் பொழுதை கழித்து வந்து ஊர் சுற்றி வந்திருக்கிறார்.

அந்த நண்பருக்கு கல்யாணம் ஆகி, ஒரு அழகான மனைவி ஒருவர் இருந்தார். அதனால், தீரஜ் என்ற இளைஞன், அவரின் நண்பரை பார்க்க அடிக்கடி அந்த நண்பன் வீட்டிற்கு சென்று உள்ளான். அதுவும், அந்த நண்பனின் மனைவியை பார்க்க செல்வதையே அவன் வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், அந்த குடும்பத்தினர் கூட்டு குடும்பமாக வசித்து வந்ததால், அந்த வீட்டிற்கு அவர் அடிக்கடி வருவதை யாரும் பெரிதாக கண்டுக்கொள்ளாமல் இருந்து உள்ளனர். 

அதன் பிறகு, அந்த தீரஜ் அந்த நண்பரின் மனைவியிடம் உல்லாசத்துக்கு வருமாறு அடிக்கடி அவரை கூப்பிட்டு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். 

ஆனால், இதற்கு மறுத்துவிட்ட அந்த பெண், கணவனின் நண்பனிடம் என்ன சொல்லி தப்பிப்பது என்று தெரியாமல், தவித்து வந்தார். இதே நேரத்தில், தனது கணவனிடம் இவரை பற்றி என்ன சொல்வது என்றும் புரியாமல் அந்த பெண் தவித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் தான், அந்த தீரஜ் ஒரு நாள் அந்த வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு நண்பனை தேடி வருவதாக கூறி அந்த வீட்டிற்கு வந்திருக்கிறார். 

அப்போது, அவர் வாங்கி வந்த ஒரு கூல் ட்ரிங்க்சில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அதனை அந்த பெண்ணிடம் குடிக்க கொடுத்திருக்கிறார். 

அதனை வாங்கி குடித்த அந்த பெண், அடுத்த சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்து உள்ளார். இதனால், அந்த இளைஞர், அந்த பெண்ணை மயக்க நிலையிலேயே வைத்து பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

மேலும், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை, அவர் தனது செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.

அத்துடன், அந்த பெண் மயக்கம் தெளிந்த நிலையில், “இந்த பாலியல் பலாத்காரம் குறித்து வெளியே சொன்னால், இந்த வீடியோவை  அனைவருக்கும் பரப்பி விடுவேன்” என்றும், அவர் மிரட்டி இருக்கிறார். 

மேலும், “உன் கணவர் மற்றும் குழந்தையையும் கொன்று விடுவதாகவும்” அவர் அந்த பெண்ணை மிரட்டி இருக்கிறார். 

இதனால், அந்த பெண் பயந்துபோய் இந்த விசயத்தை அவர் யாரிடமும் எதுவும் சொல்லாமல் மறைத்திருக்கிறார். 

அதன் தொடர்ச்சியாக, கடந்த 20 ஆம் தேதி அந்த ஆபாச வீடியோவை காட்டி, அந்த பெண்ணை அவர் மீண்டும் ஒரு முறை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதனால், அந்த பெண் இந்த விஷயத்தை தன்னுடைய கணவரிடம் கூறி இவர் கதறி அழுதிருக்கிறார். 

மனைவி சொல்வதை கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீரஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.