தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகனாகவும் மிகச் சிறந்த நடிகராகவும் வலம் வரும் நடிகர் சூர்யா வழக்குரைஞர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிற நவம்பர் 2-ம் தேதி தீபாவளி வெளியீடாக அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகும் திரைப்படம் ஜெய் பீம்.

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் த.சே.ஞானவேல் இயக்கியுள்ள ஜெய்பீம் படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், மணிகண்டன், லிஜோமொள் ஜோஸ் மற்றும் ராஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். S.R.கதிர் ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ள ஜெய்பீம் படத்திற்கு, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

முன்னதாக வெளிவந்த டீசர், டிரைலர் மற்றும் பவர் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஜெய் பீம் படத்தின் தல கோதும் என்ற புதிய பாடல் வெளியானது. பாடல் வரிகளை இயக்குனர் ராஜு முருகன் எழுத, பிரதீப்குமார் பாடியிருக்கும் அழகான தல கோதும் பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.