தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்து திரைக்கு வரும் படம் புஷ்பா. இயக்குனர் சுகுமார் எழுதி இயக்கியுள்ள புஷ்பா The-Rise Part-1 திரைப்படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக வருகிற டிசம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கும் புஷ்பா திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, தனஞ்செய், சுனில், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ள புஷ்பா திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டன்செட்டி மீடியா இணைந்து தயாரித்துள்ளது.

மிர்ரோஸ்லா குபா ப்ரோஸ்கி ஒளிப்பதிவில், கார்த்திகா ஸ்ரீநிவாஸ் படத்தொகுப்பு செய்துள்ள புஷ்பா திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் புஷ்பா திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தேவி ஸ்ரீபிரசாத் இசையில் வெளிவந்த புஷ்பா படத்தின் 2 பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 3-வது பாடலாக “சாமி சாமி” பாடல் வருகிற அக்டோபர் 28-ம் தேதி காலை 11.07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முன்னோட்டமாக “சாமி சாமி” பாடலின் புதிய ரொமான்டிக் ப்ரோமோ டீசர் வெளியானது. அந்தப் வீடியோ இதோ…