தன் மிடுக்கான உடல் மொழியாலும் ஸ்டைலாலும் என்றும் மக்களை கவர்ந்து இழுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திரையுலகில் நடிகராக 46 வருடங்களை கடந்தும் இன்றும் அதே வேகத்தோடு மாஸ் கதாநாயகனாக தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

அந்த வகையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முதல் முறை இயக்குனர் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் அவர்கள் தயாரித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்திய திரைத்துறையின் உயரிய விருதான தாதாசாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழில் செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள் மற்றும் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள் பெற்றிருந்த இந்த உயரிய விருதை தற்போது ரஜினிகாந்த் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று டெல்லியில் நடைபெற்ற 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதாசாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விருதைப் பெற்றுக்கொண்ட வைரல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.