17 வயது உறவுக்கார சிறுவனோடு 30 வயது பெண்ணுக்கு கள்ளக் காதல் ஏற்பட்டு சம்பவத்தில், அந்த பெண் சிறுவனோடு வீட்டை விட்டு ஓட முயன்றபோது அந்த சிறுவனால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பனசங்கரி பகுதியைச் சேர்ந்த 35 வயதான தொழிலதிபருக்கு, 30 வயதில் மனைவி ஒருவர் இருக்கிறார். இந்த தொழிலதிபர் தம்பதிகளுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். 

இந்த நிலையில் தான், அந்த தொழிலதிபரின் கணவரின் உறவுக்கார சிறுவனான 17 வயதான டீனேஜ் சிறுவன் ஒருவன், அடிக்கடி அந்த வீட்டிற்கு வந்து சென்று இருக்கிறார். 

அப்போது, அந்த உறவுக்கார சிறுவனோடு, அந்த தொழிலதிபரின் மனைவிக்கு கள்ளக் காதல் ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதனால், அந்த தொழிலதிபர் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், அந்த பெண் அந்த டீனேஜ் சிறுவனோடு தனிமையில் உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. 

இப்படியாக, அந்த பெண் அந்த சிறுவனோடு அடிக்கடி தனிமையில் சந்தித்து தவறான ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்தார் என்றும் தெரிகிறது.

இப்படியாக தொடர்ந்த இந்த கள்ளக் காதல் உறவு, நாளடைவில் அந்த பெண்ணின் கணவருக்குத் தெரிய வந்தது. இதனால், கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டையும் வந்தது.

இதனால், நிம்மதி இழந்து தவித்த அந்த 30 வயது பெண், தனது உறவுக்கார 17 வயது சிறுவனிடம் “நாம் வீட்டை விட்டு ஓடி விடலாமா?” என்று கேட்டிருக்கிறார். ஆனால், அந்த சிறுவன் இதற்கு சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால், அந்த 17 வயது சிறுவனுக்கும், அந்த 30 வயது பெண்ணிற்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. 

இந்த தகராறின் போது அந்த பெண்ணின் கணவர் வரும் சத்தம் கேட்டதும், அந்த பெண் அந்த சிறுவனை தன்னோடு ஓடி வருமாறு கூறி அடம் பிடித்திருக்கிறார். ஆனால், அந்த சிறுவன் வராததால், அந்த பெண் அந்த சிறுவனை அங்கிருந்த ஒரு கத்தரிக்கோலால் தாக்கி உள்ளார். 

இதனால், கடும் கோபம் அடைந்த அந்த சிறுவன், அந்த பெண்ணை அங்கிருந்த கத்தியால் அந்த பெண்ணை குத்தி கொலை செய்துள்ளார்.

பின்னர், அந்த பெண்ணை அந்த வீட்டில் உள்ள ஒரு போர்வையால் மூடி வைத்து, அந்த பெண்ணை தீ வைத்து கொளுத்தி உள்ளார். 

இதனையடுத்து, அந்த வீட்டிற்குள் இருந்து துர்நாற்றத்துடன் புகை வந்ததால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். 

இது குறித்து விரைந்து வந்த போலீசார், அந்த வீட்டிற்கு வந்த நிலையில், அங்கிருந்த சிறுவனை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.