தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இசையமைப்பாளர் அனிருத் இசையில் முன்னதாக இந்த ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படத்திலும் அனிருத்தின் இசை படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய பலமாக அமைந்தது.

இதனையடுத்து மீண்டும் பீஸ்ட் படத்தில் தளபதி விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் பணியாற்றுகிறார் அனிருத். தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் மற்றும் நடிகர் தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திருச்சிற்றம்பலம் மற்றும் சிவகார்த்திகேயனின் டான் ஆகிய திரைப்படங்களிலும் அனிருத் இசை தான்.

தொடர்ந்து பாடகரும் பாடலாசிரியருமான தெருக்குரல் அறிவு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இணைந்து உருவாக்கியுள்ள விழிப்புணர்வு பாடலான ஊசிங்கோ பாடல் தற்போது வெளியானது. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஊசிங்கோ பாடலுக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய,சதீஷ் கிருஷ்ணன் நடன இயக்கம் செய்துள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் வித்தியாசமான விழிப்புணர்வு பாடலாக, அனிருத் மற்றும் தெருக்குரல் அறிவின் கலக்கலான ஊசிங்கோ பாடல் வெளியானது. சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் இப்பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.