கதறித்துடித்த கை குழந்தையின் கண் முன்னே, அவரது தாயரை 3 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியதுடன், நெஞ்சை உறைய வைத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படி ஒரு உச்சக்கட்டமான கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் நாகூர் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீபலாஜி காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் 35 வயதான பெண் ஒருவர் தன்னுடைய ஒரு வயது கை குழந்தை உடன், அந்த பகுதியில் உள்ள கடைக்கு கடந்த வாரம் நடந்து சென்றுக்கிறார்.

அதன்படி, கடைகளில் பொருட்களை வாங்கிவிட்டு, அந்த பெண் தனது கை குழந்தையுடன் வீடு திரும்பி கொண்டிருந்தார். 

அப்போது, அது இரவு நேரம் என்பதால், அந்த இரவு நேரத்தில் அந்த வழியாக 3 இளைஞர்கள் ஒரு இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்துள்ளனர்.

அப்போது, இளம் வயது பெண் கை குழந்தையுடன் வந்திருந்ததைப் பார்த்து மோகமடைந்த அந்த 3 பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய நொடி பொழுதில் திட்டமிட்டனர்.

அதன்படியே, அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை அங்கு ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, நடந்துச் சென்றுகொண்டிருந்த அந்த பெண்ணை சட்டென்று வயிற்றில் தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் நிலை குலைந்த அந்த பெண், அந்த இடத்திலேயே கீழே விழுந்து வலி தாங்க முடியாமல் வலியால் மிக கடுமையாகத் துடித்து உள்ளார். 

அத்துடன், தனது கையிலிருந்த குழுந்தையை அவர் கீழே விழுந்தும் அவர் தவற விடாமல் தனது உடலோடு அணைத்துக்கொண்டிருந்து அழுது துடித்த அந்த தருணத்தில், அந்த பெண்ணின் கையிலிருந்த குழந்தையை பிடித்த வீசய அந்த கும்பல் கொடூரச் செயலில் ஈடுபட்டபோது, அந்த குழந்தை கீழே விழுந்து கதறித் துடித்துக்கொண்டிருந்த நிலையில், அந்த 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை அங்கிருந்து ஒரு வயல்வெளிப் பக்கமாக இழுத்துச் சென்று அவர்கள் 3 பேரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

அப்போது, அந்த கை குழந்தை தனது தாயின் நிலையைப் பார்த்து இன்னும் கதறித்துடித்த நிலையில், அந்த பெண்ணும் தன்னுடைய குழந்தை அழுவதைப் பார்த்து, “என் குழந்தை கத்திட்டிருக்கு, என்னை விடுங்கடா” என்று, அவர்களிடம் கெஞ்சியிருக்கிறார். 

ஆனாலும், துளியும் இறக்கமில்லாத அந்த கும்பல், அந்த பெண்ணை விடாமல் மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வெறியாட்டம் நடத்தி உள்ளனர். 

மேலும், இந்த விசயம் குறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறி, அந்த பெண்ணின் முடியை வெட்டி 6 மணி நேரம் கழித்து அனுப்பி வைத்து உள்ளனர். 

அதன் பிறகு, அங்கிருந்து நடக்க முடியாமல் நடந்து வந்த அந்த பெண், தனது கை குழந்தையுடன் வீட்டிற்குத் திரும்பிய நிலையில், தனக்கு நேர்ந்த இந்த கொடூர கொடுமைகள் குறித்து தனது சகோதரனிடம் கூறி அழுதிருக்கிறார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அதில் ஒருவரைக் கைது செய்துள்ள உள்ள நிலையில், மற்ற குற்றவாளிகளை வலை வீசித் தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பெரும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.