தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக இயக்குனர் மனோ ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள F.I.R திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. F.I.R. படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள சைக்கோ த்ரில்லர் திரைப்படமான மோகன்தாஸ் திரைப்படத்திலும் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார்.மோகன்தாஸ் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.முன்னதாக இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் முண்டாசுப்பட்டி. 

தொடர்ந்து ராம்குமாரின் ராட்சசன் திரைப்படத்திலும் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில் இயக்குனர் ராம்குமார் முண்டாசுப்பட்டி தயாரிப்பாளர் சி.வி.குமார் அவர்களும் இன்று சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

மேலும் அந்த புகைப்படத்தோடு,”எங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்” என தயாரிப்பாளர் சி.வி.குமார் கேட்க, அதை குறிப்பிட்டு நடிகர் விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில், “முண்டாசுப்பட்டி 2??? எடுறா அந்த கேமராவ” என குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களின் மனம் கவர்ந்த திரைப்படமான முண்டாசுப்பட்டி  2-ம் பாகம் வெளிவருமா என்ற ஆர்வம் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையில், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.