கணவனையும் தனது 2 வயது பெண் குழந்தையையும் தவிக்கவிட்டு விட், தோழியுடன் குடும்பம் நடத்தி வரும் இளம் பெண்ணால் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் நடைபெறும் இந்த சம்பவமானது, தற்போது தமிழ்நாட்டில் நடந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 

கணவனையும் 2 வயது பெண் குழந்தையையும் தவிக்கவிட்டு தோழியுடன் குடும்பம் நடத்தி வருகிறார் ஒரு பெண்.  உறவினர்கள் எத்தனையோ சொல்லியும் அவர் கேட்கவில்லை நீதிமன்றத்திற்குச் சென்று முறையிட்டும் அவர் மேஜர் என்பதால் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டது.  

தமிழகத்தில் உள்ள பனங்காடியைச் சேர்ந்த 21 வயதான ஜெயஸ்ரீ என்ற இளம் பெண், சரவணன் என்ற இளைஞரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு முறைப்படி திருமணம் செய்துகொண்டு இருக்கிறார். 

திருமணத்திற்குப் பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த தம்பதிக்குக் கடந்த 2019 ஆம் ஆண்டில் ஒரு ஆண் குழந்தை பிறந்து உள்ளது.

இதனையடுத்து, குழந்தை பிறந்த அடுத்த சில மாதங்களிலேயே ஜெயஸ்ரீ திடீரென்று தனது வீட்டில் இருந்து மாயமாகி உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவன் சரவணன், தனது மனைவியை பல இடங்களில் தேடியும், கிடைக்காத நிலையில், அந்த பெண்ணின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து பலவாறு பேசி உள்ளனர்.

இதனால், வேறு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த ஜெயஸ்ரீயின் தாயார் செல்வராணி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் “ என் மகள் ஜெயஸ்ரீயை கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும்” என்று, ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து ஜெயஸ்ரீயை உடனே கண்டுபிடிக்க வேண்டும்” என்று, அதிரடியாக உத்தரவிட்டனர். 

இதனையடுத்து, போலீசார் மாயமான ஜெயஸ்ரீயை பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், அவர் பள்ளித் தோழி ஒருவருடன் ஒன்றாக சேர்ந்து இரு பெண்களும் குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது.

அத்துடன், இந்த இரு பெண்களும் சென்னையில் ஒன்றாகத் தங்கி இருந்து அவர்கள் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்ததால், அங்கு சென்று போலீசார் விசாரித்த நிலையில், “எனது பள்ளி தோழியான துர்கா தேவியுடன் வாடகை வீட்டில் கணவன் மனைவியை போல் அவர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்ததை” ஜெயஸ்ரீ போலீசாரிடம் கூறியிருக்கிறார். 

மேலும், ஜெயஸ்ரீ தன்னை ஆண் போல சிலை அலங்காரம் செய்துகொண்டு கணவன் போலவே, தனது பள்ளி தோழியான துர்கா தேவியிடம் நடந்து கொண்டு குடும்பம் நடத்தி வந்திருக்கிறார் என்பதையும் போலீசார் உறுதி செய்தனர்.

இதையடுத்து, ஜெயஸ்ரீ - துர்க்கா தேவியை மதுரைக்கு அழைத்து வந்த போலீசார் கடந்த 27 ஆம் தேதி அன்று ஜெயஸ்ரீயை போலீசார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்னிறுத்தினர். 

அப்போது, நீதிபதியிடம் பேசிய ஜெயஸ்ரீ, “நான் என் குழந்தை மற்றும் கணவனுடன் வாழ்வதை விரும்பவில்லை” என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். 

மேலும், “எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நான் தான் கணவன் என்றும், என் தோழியா துர்கா தேவி தான் எனது மனைவி” என்றும், அவர் கூறியுள்ளார். 

அப்போது, அந்த பெண்ணின் வாக்குமூலங்களைக் கேட்டுக்கொண்ட நீதிபதி, “ஜெயஸ்ரீ மேஜர் என்பதால் அவர் விருப்பப்படி செல்லலாம்” என்று, நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன், ஜெயஸ்ரீயின் குழந்தைக்கு 2 வயது தான் ஆகிறது என்பதால், குழந்தையை வளர்க்க உறவினர்கள் சிரமப்படுகின்றனர் என்றும், நீதிமன்றத்தில் கூறப்பட்டது. இதனால், ஜெயஸ்ரீ மீண்டும் வரவேண்டும் குழந்தையைத் தவிக்க விட்டுச் செல்லக் கூடாது என்றும் கூறப்பட்டது.

குறிப்பாக, “இது சட்டப்படி குற்றம் என்பதால், இந்தியத் தண்டனை பிரிவு 317 ன் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்று, செல்வராணியின் வழக்கறிஞர் வாதிட்டார்.

இதை விசாரித்த நீதிபதிகள், இதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், “ஜெயஸ்ரீ மேஜர் என்பதால் அவரது விருப்பப்படி செல்ல உத்தரவிட்டு விட்டு” இந்த வழக்கை முடித்து வைத்தனர். இதனால், நீதிமன்ற வாளகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.