ஆர்.ஜே.டி. கட்சியை  சேர்ந்த  முன்னாள் எம்.பியும், தற்போதைய எம்.எல்.ஏவுமான சுரேந்தர பிரசாத் யாதவ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி, பழைய நடிகரின் போட்டோவை போட்டு சமூக வலைத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள சம்பவம், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

அரசியல் தலைவர்கள் மேடைகளில் பேசும் போதெல்லாம் அது சரியா? தவறா? என்றெல்லாம் தெரியாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் புள்ளி விபரங்களை ஆராய்ந்து சொல்வதை போல், இஷ்டத்துக்கு பேசி பொதுமக்களிடம் கைத் தட்டல்களை பெறுவதுண்டு.

அதே போல், இன்னும் சிலர் மேடைகளில் பேசும் போது தலைவர்களின் பெயர்களை மாற்றி மாற்றி கூறி உளறிக்கொண்டுபோவதுண்டு. இவையெல்லாம் இந்திய அரசியல் களத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் தான்.

என்றாலும், தற்போது ஆர்.ஜே.டி. கட்சியை  சேர்ந்த  முன்னாள் எம்.பியும், தற்போதைய எம்.எல்.ஏவுமான சுரேந்தர பிரசாத் யாதவ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளது, பழைய அரசியல் நகைச்சுவைகளை நினைவுபடுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

அதாவது, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நேற்றைய தினம் பிறந்த நாள் என்பதால், அமித்ஷாவுக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும் தொடர்ந்து வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

முக்கியமாக, பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக பிரமுகர்களும், அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். 

அப்போது, முன்னாள் எம்.பியும், தற்போதைய எம்.எல்.ஏவுமாகவும் இருக்கும் சுரேந்தர பிரசாத் யாதவ், மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது நாடு முழுவதும் பெரிய அளவில் வைராகி வருவதுடன் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

அதாவது, பீகாரை சேர்ந்த பெலகானி தொகுதியின் எம்.எல்.ஏவான சுரேந்தர பிரசாத் யாதவ், முன்னாள் அமைச்சராகவும், ஜெகனாபாத் தொகுதியின் எம்.பி.யாகவும் அவர் பதவி வகித்து வந்திருக்கிறார்.

குறிப்பாக, ஆர்.ஜே.டி. கட்சியை  சேர்ந்த  சுரேந்தர பிரசாத் யாதவ், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நேற்றைய தினம் பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார். 

அந்த வாழ்த்து பதிவில், அமித்ஷா போட்டோவை போடுவதற்குப் பதிலாக, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா வில்லன் நடிகரான “ராமி ரெட்டி”யின் போட்டோவை போட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து, இந்த டிவிட்டர் பதிவு, நாடு முழுவதும் தீயாய் பரவ, தன் தவறை உணர்ந்த அவர், “என்னை மன்னிக்க வேண்டும் என்றும், இடைத் தேர்தல் பரபரப்பில் இந்த தவறை செய்துவிட்டேன்” என்றும், விளக்கம் அளித்து உள்ளார்.  

மேலும், “எங்களின் அற்புத தலைவருக்கு பிறந்த நாள்” என்று, அவர் பதிவிட்ட மறு பதிவும் தற்போது சிரிப்பையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதற்கு முக்கிய காரணம், இந்த முறை அவர் தமிழ் சினிமா வில்லன் நடிகரும், இயக்குநருமான “சந்தான பாரதியின்” போட்டோவை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதனால், இணையவாசி கள் பலரும் அந்த எம்.எல்.ஏவை இணையத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த சம்பவம், இந்தியா முழுவதும் உள்ள சக அரசியல் கட்சியினரிடையே காமெடியை ஏற்படுத்தியதுடன், பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.