குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 28-ம் தேதி டெல்லி கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார் அப்பொழுது பேசியவர் தானும் என்.சி.சி. மாணவன் தான் என தெரிவித்தார்.

modi

பள்ளிகளில் உள்ள போதை பொருட்கள், இளைஞர்களின் வாழ்க்கையை அழிக்கிறது. அதற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 28-ம் தேதி டெல்லி கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற தேசிய மாணவர் படை  அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது தானும் என்.சி.சி மாணவன் என்பதை நினைவு கூறும் வகையில் என்.சி.சி பாரம்பரிய தொப்பியான "ஹேக்கிள்"-ஐ அணிந்துக்கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதனைத்தொடர்ந்து இந்நிகழ்வின் போது தேசிய மாணவர் படையினர் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினார். நிகழ்ச்சியின்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இளைஞர்களின் சக்தி நாட்டிற்கு தேவை. தேசத்தின் நலனை முன்னிலை படுத்தும் இளைஞர்களை உலகின் எந்த ஒரு சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த நாளிலிருந்து, அடுத்த 25 ஆண்டுகள் உங்கள் செயல்பாடுகள் அனைத்தையும் நாட்டின் வளர்ச்சிக்கும் நாட்டின் எதிர்பார்ப்புகளும் அர்ப்பணிக்க வேண்டும். நம் நாட்டு மக்களின் வியர்வையால் உருவான பொருட்களை நாம் பயன்படுத்தினாலே இந்தியாவின் தலைவிதியை நிச்சயமாக மாற்ற முடியும்.

மேலும் தொழில்நுட்பங்களில் நாம் முன்னேறி வருகிறோம். அனைவரின் கையிலும் தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளது. ஆனால் அதில் உள்ள நல்ல விஷயங்களை மட்டுமே கற்றறிந்து கொள்ள வேண்டுமே தவிர தவறான விஷயங்களுக்கு நம் பலியாகி விடக்கூடாது. ஒருவர் மாறுகையில், அவர் மட்டுமன்றி இந்த சமூதாயத்தையம் அவர் மாற்ற முனைய வேண்டும். மக்களிடம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். என்.சி.சி மற்றும் என்.எஸ்.எஸ் மாணவர்கள், தங்கள் பள்ளிகளில் போதை பொருள் வருவதை தடுக்க வேண்டும். எப்படி நாம் அந்த பழக்கத்தில் இருந்து விலகி இருக்கிறோமோ, அப்படி நம் நண்பர்களையும் அந்த பழக்கத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். 

இந்நிலையில் நானும் என்.சி.சி.யில்  ஒரு மாணவன் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்; என்.சி.சி-யை வலுப்படும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவகின்றது. இந்தியாவின் புதிய மாற்றமாக பெண்களும் பலர் என்.சி.சி கேப்டன்-களாக உள்ளனர். அப்படி, கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட என்.சி.சி-யினர் எல்லை பாதுகாப்பு பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். நம் நாட்டின் மகள்கள் (பெண்கள்) போர் விமானங்களை இயங்குகின்றனர். ஆகவே இளைஞர்கள் புத்துணர்வுடன் இருந்து செயலாற்ற வேண்டும்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.