செய்தி வாசிப்பாளராக ஊடகத்தில் தன் பணியைத் தொடங்கி, சின்னத்திரை மெகா தொடர்களில் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது வெளித்திரையின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். கடந்த ஆண்டின்(2021) இறுதியில் இயக்குனர் சர்ஜுன்.K.M இயக்கத்தில் ப்ரியா பவானி ஷங்கர் நடித்த BLOOD MONEY திரைப்படம் நேரடியாக ZEE5 தளத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு(2022) ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் வரிசையாக அடுத்தடுத்து பல திரைப்படங்கள் வெளிவர உள்ளன. அந்த வகையில் முன்னதாக நடிகர் அதர்வாவுடன் இணைந்து நடித்துள்ள குருதி ஆட்டம், இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா உடன் இணைந்து நடித்துள்ள பொம்மை மற்றும் நடிகர் அசோக் செல்வன் உடன் இணைந்து நடித்துள்ள ஹாஸ்டல் உள்ளிட்ட திரைப்படங்கள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளன.

மேலும் தனுஷுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வரும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் , இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் உடன் யானை, ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன், சிலம்பரசனுடன் பத்து தல ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நடிகை ப்ரியா பவானி ஷங்கர் தனது காதலருடன் இருக்கும் புதிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நீண்ட  நாட்களாக காதலித்து வரும் காதலர் ராஜவேல் அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றியுள்ளார். இதில் தனது காதலருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததோடு, “இந்த புகைப்படம் உனக்கு பிடிக்காது என்று தெரியும் அதனால் தான் பதிவேற்றினேன்” என நையாண்டியாக குறிப்பிட்டு ப்ரியா பவானி ஷங்கர் பதிவிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ …