கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தான் இப்படி ஒரு துயர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், அந்த மாநில பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான பி.எஸ். எடியூரப்பாவின்
மூத்த மகள் பத்மாவதி.

பத்மாவதி மகளான சவுந்தர்யாவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் முறைப்படி திருமணம் நடைபெற்றது. 

தற்போது, 30 வயதான சவுந்தர்யா, பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். 

அத்துடன், டாக்டர் சவுந்தர்யா, பெங்களூருவில் உள்ள மவுண்ட் கார்மெல் கல்லூரியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், தனது கணவருடன் வசித்து வந்தார். 

இந்த தம்பதிக்கு, 6 மாத கைக் குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்த நிலையில் தான், சவுந்தர்யா தனது கணவருடன் வசித்து வந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பில், இன்றைய தினம் வீட்டின் படுக்கை அறையில் உள்ள பேனில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு இருக்கிறார். 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து விரைந்து வந்த போலீசார், சவுந்தர்யாவின் உடலலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், சவுந்தர்யா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அத்துடன், உயிரிழந்த சவுந்தரியாவின் உடலை கைப்பற்றி, பெங்களூரு போரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சவுந்தர்யா தற்கொலை செய்துகொண்ட செய்தி, அவரது குடும்பத்தினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

குறிப்பாக, சவுந்தர்யா தற்கொலை குறித்து கேள்விப்பட்ட எடியூரப்பா மருத்துவமனைக்கு விரைந்து உள்ளார்.

இந்த நிலையில் தான், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வரான பி.எஸ் எடியூரப்பாவுக்கு ஆறுதல் சொல்ல, தனது சக அமைச்சர்களுடன் தற்போது மருத்துவமனைக்கு விரைந்து உள்ளார். 

இதனிடையே, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை செய்து கொண்டதாக செய்தி, அந்த மாநிலம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.