பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிக்பாஸ் ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக அறிவிக்கப்பட்டது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி. 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் மட்டுமே காண இயலும்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் உள்ளனர். இதுவரை நடைபெற்ற பிக் பாஸ் சீசன்களில் இருந்து போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் மூலம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக களமிறங்குகின்றனர். வருகிற ஜனவரி 30 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. 

இதனிடையே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை அறிமுகம் செய்யும் வகையில் ப்ரோமோ வீடியோக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுவரை கவிஞர் சினேகன், ஜூலி, வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோர் பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்வதை உறுதி செய்யும் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகின.

இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் 6-வது போட்டியாளராக பிக்பாஸ் 2-வது சீசனில் விளையாடிய போட்டியாளரும், நகைச்சுவை நடிகரும் விஜய் டிவி பிரபலமுமான தாடி பாலாஜி அவர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார். தாடி பாலாஜி பிக்பாஸ் அல்டிமேட் களமிறங்கும் புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. ட்ரெண்டாகும் அந்த ப்ரோமோ வீடியோ இதோ…