“தனது உள்ளாடை அளவு குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் அதுவும் பொது வெளியில் பேசிய நடிகை சுவேதா திவாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, போலீசுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

பாலிவுட் நடிகை சுவேதா திவாரி, பல்வேறு இந்தி படங்களிலும், பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து மிகவும் பிரபலம் ஆனவராக வலம் வருகிறார். 

குறிப்பாக, இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு, இன்னும் புகழ்பெற்றார் பாலிவுட் நடிகை சுவேதா திவாரி. 

அத்துடன், கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவர் வெற்றியும் பெற்றார்.

இந்த நிலையில் தான், பாலிவுட் நடிகை சுவேதா திவாரி, புதிதாக “Show Stopper” என்கிற ஒரு வெப் சீரிசில் நடித்து வருகிறார். 

பாலிவுட் நடிகை சுவேதா திவாரி உடன், ரோகித் ராய், திகன்கனா சூர்யவன்ஷி, சவுரப் ராஜ் ஜெயின் உள்ளிட்ட பல நடிகர்கள் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

குறிப்பிட்ட அந்த வெப் சீரிசின் புரோமோஷன், மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில் கடந்த 26 ஆம் தேதி புதன் கிழமை அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகை சுவேதா திவாரி உள்ளிட்ட நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடையே பேசிய நடிகை ஸ்வேதா திவாரி, “பெண்களின் உள்ளாடை மற்றும் கடவுளை ஒப்பிட்டு சரச்சைக்குரிய வகையில் பேசினார். 

அதாவது, “கடவுள் என் உள்ளாடையை அளவிடுகிறார்” என்று, பொது வெளியில் அதுவும் செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படையேகவே பேசி உள்ளார்.

நடிகை ஸ்வேதா திவாரியின் இந்த பேச்சு மிகப் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்து கிளம்பி உள்ளது. 

அதுவும், நடிகை ஸ்வேதா, தனது சக நடிகரான சவுரப் ராஜை குறிப்பிட்டே இப்படி பேசியதாகவும் ஒரு பக்கம் கூறப்படுகிறது. அந்த நடிகர்  புகழ் பெற்ற டிவி தொடரான மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணராக நடித்து புகழ் பெற்றவர்.

மேலும், அந்த “Show Stopper” என்னும் வெப் தொடரில் நடிகர் சவுரப் ராஜ், பிரா பொருத்துபவராக நடித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், காமெடியாக குறிப்பிடும் நோக்கில் நடிகை ஸ்வேதா திவாரி இவ்வாறு பேசியதாக கூறப்பட்டாலும், இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி, பூதாகரமாக வெடித்திருக்கிறது.

பிரபல நடிகை ஸ்வேதா, இப்படி சர்ச்சைக்குறிய வகையில் பேசியது சமூக வலைத்தளத்தில் பரவி கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில்,மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் இது தொடர்பாக விசாணை நடத்த போபால் காவல் ஆணையருக்கு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார். 

முக்கியமாக, “இது தொடர்பாக அடுத்த 24 மணி நேரத்தில் விசாரணை நடத்தி தன்னிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று, அவர் உத்தரவிட்டு உள்ளார்.