“இந்துத்துவாவின் ஃபர்ஸ்ட் டார்கெட் முஸ்லீம்கள் என்றும். 2 வது டார்கெட் கிறிஸ்டீன்ஸ்” என்றும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆவேசமாக பேசி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியில் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்தது முதல் வட மாநிலங்களில் சிறுபான்மையின மக்கள் அதிகமாக தாக்கப்படும் சம்பவங்கள் எல்லாம் கடந்த காலங்களில் நடந்தன.

இவற்றுடன், சமீபத்தில் நடைபெற்ற இந்து சாமியார்கள் மாநாட்டில் கூட இந்துத்துவா கொள்கையை உயர்த்திப் பிடித்தும், இந்துத்துவாவை மீட்க எதையும் செய்வோம், கொலையும் செய்வோம் என்றும், ஆளும் பாஜக அமைச்சர்களே பேசிய காட்சிகள் எல்லாம் இணையத்தில் வீடியோவாக வெளியாகி, பொது மக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தான், “கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக மத்தயில் ஆட்சிக்கு வந்தமு முதல் கிறிஸ்தவ மிஷனரிகள் மீது, கட்டம் கட்ட தொடங்கியதாகவும், கடும் விமர்சனங்கள் எழுந்தன.

“கிறிஸ்தவ மிஷனரிகளின் உரிமத்தை ரத்து செய்வதும், அவர்களுக்கு வெளி நாடுகளிலிருந்து வரும் முறையான நிதியையும் தடுத்து இன்னும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிராக செயல்பட்டதாகவும்” மிகப் பெரிய விமர்சனங்கள் பாஜக மீது வைக்கப்பட்ட நிலையில், அவை கரைகளாகவும் மாறிப்போனது.

இந்த சூழலில் தான், இந்தியாவில் உள்ள அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி என்கிற ஒரு கிறிஸ்தப அமைப்பானது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்த கிறிஸ்தவ மிஷனரி குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்ட ட்வீட் ஒன்று, இந்திய அரசியலில் மிகப் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது.

அதாவது, “கிறிஸ்தப சாரிட்டியின் வங்கி கணக்குகள் அனைத்தையும், மத்திய அரசானது இயேசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் அன்று முடக்கி உள்ளது என்றும், இதனால் கிட்டதட்ட 22 ஆயிரம் பேர் உணவும் மருந்துகளும் இல்லாமல் பரிதவிக்கின்றனர்” என்றும், பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சகம், இந்த குற்றச்சாட்டை மறுத்தது. அத்துடன், மத்திய அரசு தரப்பில் “கிறிஸ்தப சாரிட்டியின் வங்கி கணக்குகள் எதுவும் முடக்கப்படவில்லை” என்றும், விளக்கமும் அளித்ததாகவும் கூறப்பட்டதாக செய்திகள் வெளியானது.

அதே நேரத்தில், “அந்நிய பணபரிவர்த்தனை சான்றிதழை புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அதன் காரணமாக கிறிஸ்தப சாரிட்டி தான், வங்கி கணக்குகளை நிறுத்தி வைக்க சொன்னதாகவும்” மத்திய அரசு புதிய விளக்கம் அளித்தது.

இந்த சூழலில், இது குறித்து டிவீட் செய்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “கிறிஸ்தப மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்த நடவடிக்கைளை பிரதான ஊடகங்கள் மறைத்து விட்டன என்றும், அது வேதனைக்குரியது என்றும், மிகவும் வெட்கப்பட வேண்டிய விசயம்” என்றும், பாஜக அரசு பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

குறிப்பாக, “அங்கீகாரத்தை புதுப்பிக்கக் கோரும்போது, அதனை மத்திய அமைச்சகம் நிராகரித்தது என்பது இந்தியாவில் உள்ள ஏழைகள் மற்றும் எளியவர்களுக்காக மகத்தான சேவை செய்துவரும் என்ஜிஓகளுக்கு எதிரான தாக்குதல்” என்றும், பகிரங்கமாகவே பாஜக அரசு மீது குற்றம்சாட்டி உள்ளார். 

மேலும், “இந்த விவகாரத்தில், கிறிஸ்தவ தொண்டுப் பணிக்கு எதிராக பாகுபாட்டுடன், முன் முடிவுடன் மத்திய அரசு நடப்பது தெளிவாக தெரிகிறது” என்றும், ப.சிதம்பரம் வெளிப்படையாகவே பாஜகவை சாடி உள்ளார்.

மிக முக்கியமாக, “இஸ்லாமியர்கள் முதலில் குறிவைக்கப்பட்டார்கள் என்றும், ஆனால் இப்போது இந்துத்துவா படையின் இலக்காக கிறிஸ்தவர்கள் மாறி உள்ளார்கள்” என்றும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார். இது, சக கிறிஸ்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பான செய்திகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.