தமிழ் சினிமாவின் மிக முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக முன்னணி நட்சத்திர நடிகர்கள் அனைவரும் இணைந்து நடித்து வரும் நடிகர் யோகிபாபு, குணச்சித்திர நடிகராகவும் கதாநாயகனாகவும் பல திரைப்படங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்து வருகிறார்.

முன்னதாக நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து பீஸ்ட்,H.வினோத் இயக்கத்தில் அஜீத்துடன் வலிமை, சிவகார்த்திகேயனுடன்  அயலான், விஜய் சேதுபதியுடன் கடைசி விவசாயி, விஷாலுடன் வீரமே வாகை சூடும் என உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.

இதனிடையே பொம்மை நாயகி, காசேதான் கடவுளடா, பன்னிக்குட்டி மற்றும் மலையாள இயக்குனர் ரெஜிஷ் மித்தில்லா இயக்கத்தில் புதிய ஃபேண்டசி நகைச்சுவை திரைப்படம் என அடுத்தடுத்த படங்களில் முன்னணி கதாப்பாத்திரங்களிலும் கதாநாயகனாகவும் யோகிபாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் யோகிபாபுவின் செல்ல மகன் விஷாகனின் முதல் பிறந்தநாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த பிறந்தநாள் விழாவில் இயக்குனர் ஷங்கர், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் & சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர். யோகி பாபுவின் மகன் விஷாகன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ…