மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் டொவினோ தாமஸ் மலையாளம் மட்டுமல்லாமல் பிற மொழி சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர். அடுத்ததாக மலையாளத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து வாஷி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் டொவினோ தாமஸ்.

முன்னதாக, சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்தில் டொவினோ தாமஸ் நடித்துள்ள திரைப்படம் மின்னல் முரளி. வீக் என்ட் ப்ளாக்பஸ்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், மின்னல் முரளி படத்தை இயக்குனர் பாசில் ஜோசப் இயக்கியுள்ளார். டொவினோ தாமஸ் உடன் இணைந்து மின்னல் முரளி படத்தில் குரு சோமசுந்தரம், அஜு வர்கீஸ், ஹரிஸ்ரீ அசோகன் ஆகியோர் நடித்துள்ளனர். 

சமீர் தாஹிர் ஒளிப்பதிவில், ஷான் ரஹ்மான் மற்றும் சுஷில் ஷ்யாம் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த ஆண்டு(2021) கிறிஸ்துமஸ் விருந்தாக கடந்த டிசம்பர் 24ஆம் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் நேரடியாக ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது.

தொடர்ந்து பல மொழிகளிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள மின்னல் முரளி திரைப்படம் நெட்ஃபிலிக்ஸில் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 11 நாடுகளில், அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத திரைப்படங்களின் டாப் 10 பட்டியலில் மின்னல் முரளி திரைப்படம் முதலிடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
tovino thomas minnal murali in first place of netflix top10 list in 11 countries