வீட்டின் ஜன்னலை உடைத்துக்கொண்டு “கள்ளக் காதலனுடன் ஓடிய மனைவியை கண்டுபிடித்து தந்தால் 5 ஆயிரம் பரிசு தருகிறேன்” என்று, கணவன் அறித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவின் பிங்கலா என்னும் பகுதியைச் சேர்ந்த தச்சு வேலை பார்க்கும் தொழிலாளி ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

அவர், வேலை விசயமாக ஐதராபாத்தில் தங்கி இருந்து வேலை செய்து வரும் நிலையில், இவரின் மனைவியும், குழந்தையும் அவருடைய பெற்றோருடன் சொந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

இந்த சூழலில் தான், கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி அன்று இவருடைய மனைவி, குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்த ஜன்னல் கம்பிகளை உடைத்துக்கொண்டு, வேறு ஒரு நபருடன் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறித்த அந்த பெண்ணின் கணவன், கடும் அதிர்ச்சியடைந்த நிலையில் மறுநாள் தனது கிராமத்துக்கு சென்றிருக்கிறார்.

ஊரில் பல்வேறு இடங்களில் தனது மனைவி மற்றும் குழந்தையை தேடிப் பார்த்து விட்டு இறுதியாக தனது ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை பகிர்ந்துவிட்டு அதன் மூலம் பொது வெளியில் உதவியை எதிர்பார்த்திருக்கிறார்.

அதன்படி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “நான் என் மனைவி மற்றும் என் குழந்தையை தேடி அலைகிறேன். யாராவது கண்டுபிடித்து கொடுத்தால் அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு தருகிறேன்” என்று, பதிவிட்டு உள்ளார். 

இவருடைய, உருக்கமான ஃபேஸ்புக் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக அவர் தனது பதிவில் விளக்க கூறியிருப்பது என்னவென்றால், “டிசம்பர் 9 ஆம் தேதி நள்ளிரவு என் மனைவி, குழந்தையுடன் வீட்டு ஜன்னலை உடைத்து அதன் வழியாக வேறு ஒருவருடன் தப்பித்து சென்றிருக்கிறார். 

அந்த நபர், என் மனைவிக்கு செல்போன் வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த செல்போன் மூலம் இருவரும் நள்ளிரவு நேரங்களில் ரகசியமாக பேசி வந்திருக்கிறார்கள். 

அன்றைய தினம் நம்பர் பிளேட் இல்லாத டாடா நானோ கார் ஒன்று, என் வீட்டின் அருகே வந்து உள்ளது. என் மனைவியால் தனியாக ஜன்னலை உடைக்க முடியாது.

இதனால், காரில் வந்த அந்த நபர் தான் வீட்டின் ஜன்னலை உடைத்திருக்க வேண்டும். என் மனைவி வீட்டிலிருந்த நகை, பணம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குழந்தையின் பிறப்பு சான்றிதழ் போன்றவற்றை எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்” என்றும், அதில் கூறியிருக்கிறார்.

மேலும், “என் மனைவி படிக்காதவர் என்றும், ஆனால் அந்த ஆண் நபரோ என் மனைவியிடம் அது வாங்கித் தருகிறேன், இது வாங்கித் தருகிறேன் என போலியாக ஆசைகாட்டி, பல வாக்குறுதிகளை அளித்ததன் அடிப்படையில், அவரை நம்பி என் மனைவி சென்றிருக்கலாம் என்றும், அவரை பாதியில் இறக்கி விட்டால் கூட, என் மனைவிக்கு வீட்டுக்குத் திரும்பி வரத் தெரியாது” என்றும், மிகவும் உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.

அத்துடன், “என் வீட்டில் யாரும் செல்போன் பயன்படுத்துவது கிடையாது என்றும், அந்த நபர் வாங்கிக் கொடுத்த செல்போன் தான் என் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் என்றும், என் வீட்டில் உள்ள அனைவரும் என் மனைவி, குழந்தையின் வருகைக்காக காத்திருக்கிறோம்” என்றும், நெஞ்சம் உருவி அவர் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார்.

குறிப்பாக, “நான் அவர்களுடன் வாழ வேண்டும், அவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு நான் 5 ஆயிரம் ரூபாய் பரிசு தருகிறேன்” என்றும், அந்த தொழிலாளி தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார். இந்த பதிவு, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.