விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பவானி ரெட்டி.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி தொடரில் ஹீரோயினாக நடித்திருந்தார்.ப்ரஜின் இந்த தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார்.இந்த தொடர் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த தொடரில் இவரது நடிப்பினை கண்டு இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.இந்த தொடர் நிறைவடைந்த பின் சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி தொடரில் ஹீரோயினாக நடித்துவந்தார்.கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த சீரியலில் நடித்து வந்த இவர் சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார்.

இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் எப்போதும் கலந்துரையாடும் பவானி அவ்வப்போது போட்டோக்களையும்,வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்.சீரியல்களை தவிர சில படங்களிலும் பவானி நடித்துள்ளார்.தமிழை தவிர தெலுங்கிலும் சில  சூப்பர்ஹிட் சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார் பவானி ரெட்டி.

பிக்பாஸ் 5 தொடரில் முக்கிய போட்டியாளராக பங்கேற்று அசத்தி வருகிறார் பவானி.இவருக்கென்று ஆர்மி தொடங்கி ரசிகர்கள் தங்கள் அன்பை காட்டி வருகின்றனர்.தெலுங்கில் இவர் சேனாபதி என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த தொடர் Aha தளத்தில் 31ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.விறுவிறுப்பான ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்